உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!
சீனாவில் ஹாங்சோ மாகாணத்தில் வசித்து வருபவர் ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முன்னோட்டத்தையும் நடத்தி விட்டனர்.
இந்த சண்டையில் மனித உருவிலான இரண்டு ரோபோக்கள், குத்துச்சண்டை போட்டியாளர்களைப் போன்று கையுறைகள், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, போட்டியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியில் கலந்து கொள்வதற்காக, ரோபோக்களுக்கு மனிதர்களைப்போல நடக்கவும், ஓடவும், நடனமாடவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உடல் வலிமை சார்ந்த போட்டிகளில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், ரோபோக்களின் வேகம், செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு, அதனை அதிகரிப்பது குறித்தும் அறிய முடியும். இந்த ரோபோக்களை பயிற்றுவிக்க, மனித இயக்கத்தின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மே 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் ரோபோக்களை மனிதர்கள் அடங்கிய குழுதான் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் தகவல். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் ரோபோவுக்கு அயர்ன் ஃபர்ஸ்ட் கிங் என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!