வந்தே பாரத் தயிர் பாக்கெட்டில் புழு... பகீர் வீடியோ!
சொகுசு ரயிலான 'வந்தே பாரத்' ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15-ம் தேதி ரயிலில் பயணித்த ரித்தேஷ் சிங் என்பவருக்கு வழங்கப்பட்ட தயிர் பாக்கெட்டில் உயிருள்ள புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனை வீடியோ எடுத்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டு ரயில்வே அமைச்சகத்தை அவர் டேக் செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, ரயில்வே நிர்வாகம் தற்போது சாட்டையைச் சுழற்றியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்திற்கு வெறும் ரூ.25,000 மட்டுமே அபராதம் விதித்தது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று கருதிய ரயில்வே அமைச்சகம், தற்போது அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரூ.25,000-லிருந்து ரூ.50,00,000 ஆக உயர்த்தி ரயில்வே அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்காக ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகத்திற்கும் ரூ.10,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இதுபோன்ற செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், இனி வரும் காலங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ரயில்வே உணவு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!