உயரிய விளையாட்டு பதக்கங்களை சாலையில் வைத்து சென்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத்..!!

 

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் இறுதி நடவடிக்கையாக மல்யுத்த வீரர் வினேஷ் போகட் தனது பதக்கங்களை திருப்பி அளித்தார்...

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் நிறுத்தப்பட்ட அவர், இரண்டு விருதுகளையும் தலைநகர் கர்தவ்யா பாதையின் பிரதான சாலையின் நடுவில் விட்டுச் சென்றார்.பெண் மல்யுத்த வீரர்கள் நீதிக்காக போராடும் நேரத்தில் கேல் ரத்னா, அர்ஜுனா போன்ற விருதுகள் அர்த்தமற்றதாகிவிட்டன.

விருதுகளை திருப்பித் தருவதாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்துக்குச் செல்ல முயன்றபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருதுகளை நடுரோட்டில் வைத்துவிட்டுச் சென்றார். பின்னர் விருதுகளை டெல்லி போலீசார் எடுத்துச் சென்றனர். வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் சிங் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாக் ஷி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து விளையாட்டுத்துறை நடவடிக்கை எடுத்தது. மல்யுத்த கூட்டமைப்பைக் கவனிக்க இடைக்காலக் குழுவை நியமிக்க இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!