எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்!
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையில் வசித்து வருபவர் எழுத்தாளர் தேவி பாரதி. இவரின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் நாவல்கள் வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டன.
நீர்வழிப்படூஉம் என்பது, நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பது. மனிதர்கள் நீர்வழிப்படுவர்களாய் இருக்கிறார்கள். மனித இயல்பு அதுதான். இந்நாவலில் வரும் மனிதர்களும் தத்தம் பூர்வீக ஊர்களிலிருந்து வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தேவிபாரதி இந்நாவலில் காட்டும் வறுமையின் வெளிச்சம் மிகக் கூர்மையானது. பகட்டு இல்லாதது. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது படைப்பாளிக்கு அவர் கையாண்ட மொழியானது வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது.
மொழி ஊடகமானது மிக்க வலுவுடன் இந்த நாவலில் பிரயோகமாகி உள்ளது. மொழியென்று நான் சொல்வது கதைப் பிரசன்னத்தின் மொழியல்ல ; நிலமொழி’’ என எழுத்தாளர் தேவி பாரதிக்குப் புகழாரம் சூட்டி உள்ளார்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!