’க்ரோக் ஏஐ’ ஆபாச புகைப்படங்கள் நீக்கம்... இந்திய சட்டப்படி நடப்போம்... எக்ஸ் தளம் உறுதி! !
பிரபல சமூக ஊடகமான **எக்ஸ்** தளத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையான **க்ரோக்** செயலி மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்படுவது உலகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, **ஒன்றிய அரசு 72 மணி நேரத்தில் ஆபாச உள்ளடக்கங்களை நீக்க கட்டளையிட்டது**.
இதன் படி, எக்ஸ் தளத்தில் ஆபாச உள்ளடக்கங்களை பகிர்ந்தால் அந்த பதிவுகள் நீக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டு **சட்ட நடவடிக்கை** எடுக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது. கடந்த 7ம் தேதி, கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்ட பிறகும், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையில், **க்ரோக் ஏஐயின் 3,500 ஆபாச உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு, 600 கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன** என்று தெரிவிக்கப்பட்டது. இதோடு, எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டது மற்றும் இந்திய **தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு முழுமையாக கட்டுப்படுவதாக** உறுதி அளித்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!