3 லட்சத்திற்கும் அதிகமான டூ வீலர்களைத் யமஹா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!
நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான டூ வீலர்களை யமஹா நிறுவனம் குறைபாடுகள் இருப்பதால் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான யமஹா நிறுவனம், குறைபாடுள்ள பிரேக் பாகத்தைச் சரிசெய்ய ரே-இசட்-ஆர் 125 எஃப்.ஐ ஹைப்ரிட் மற்றும் ஃபாசினோ 125 எஃப்.ஐ ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இந்த பிரசாரத்தில் இடம்பெறுகின்றன.
மே 2, 2024 முதல் செப்டம்பர் 3, 2025 வரை தயாரிக்கப்பட்ட 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களின் மொத்தம் 3,06,635 வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இந்த வாகனங்களில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் முன்புற பிரேக் காலிபர் முழுமையான செயல்திறனுடன் இயங்காத குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யமஹா விளக்கம் அளித்துள்ளது. திரும்பப் பெறப்படும் அனைத்து ஸ்கூட்டர்களிலும் குறைபாடுள்ள பாகம் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள யமஹா சேவை மையங்களை அணுகலாம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!