யமுனை நதியில் கோர விபத்து... படகு கவிழ்ந்து 6 பெண்கள் உட்பட  10 பேர் பலி! 

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவனத்தில், இன்று (ஏப்.10) மதியம் யமுனை நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்டு பிருந்தாவனத்திற்கு வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், கேசி காட் (Kesi Ghat) பகுதியில் படகு சவாரி செய்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்த பயணம், மரணப் பயணமாக மாறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பலத்த காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் படகு, நதியின் குறுக்கே இருந்த தற்காலிக மிதவைப் பாலம்  மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததால், அதிலிருந்த பயணிகள் அனைவரும் அலறியபடி நதிக்குள் விழுந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்டிஆர்எஃப் (SDRF) மற்றும் என்டிஆர்எஃப் (NDRF) குழுவினர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் தீவிர மீட்புப் பணியில் இறங்கினர். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அடங்குவர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளதால், யமுனை நதியின் ஆழமான பகுதிகளில் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்