இன்று 6 மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' - தென் தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மழைப்பொழிவு சற்று குறையத் தொடங்கும் என்றாலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை நீடிக்கும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 23 முதல் 26ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, திருப்பூர்) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பாகக் காணப்பட வாய்ப்புள்ளதால், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!