undefined

"ஆமாம்... நான் மோடிக்கு விசுவாசமான நாய்.. அந்தப் பதவி என் மயிருக்கு சமம்!" - தவெக நிர்வாகிக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி!

 

தமிழக அரசியல் களம் தற்போது 'வார்த்தை போரால்' ரணகளமாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில பொதுச்செயலாளர் அருண்ராஜ், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும்போது, "அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது. அவர் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் தப்பித்திருப்பார்" என்று சாடியிருந்தார். சினிமா பாணியிலான இந்த விமர்சனத்திற்கு, அண்ணாமலை தனது வழக்கமான அதிரடி பாணியில் மிக ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அருண்ராஜின் 'நாய்' என்ற ஒப்பீட்டையே ஆயுதமாக மாற்றிப் பேசினார். "ஆமாம், இந்த அண்ணாமலை என்கிற நாயின் வாலை யாராலும் நிமிர்த்த முடியாது. இது உண்மையை மட்டுமே பேசுகிற நாய்; யாருக்கும் ஜால்ரா அடிக்கிற நாய் அல்ல" என்று சீறிய அண்ணாமலை, ஒரு சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பதற்காகத் தான் அரசியலுக்கு வரவில்லை என்று விஜய்யைச் மறைமுகமாகச் சாடினார்.

"இது நன்றியுள்ள நாய், பிரதமர் மோடிக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசுவாசமாக இருக்கும் நாய். ஒரு நடிகரைப் புகழ்ந்து பாடி பதவி வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அத்தகைய ஜால்ரா அடித்துத்தான் ஒரு பதவி கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பதவி என் மயிருக்குச் சமம்" என்று மிகவும் காட்டமாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் உயரிய ஐபிஎஸ் அரசுப் பதவியைத் துறந்து விட்டு அரசியலுக்கு வந்தது சில உன்னதமான கொள்கைகளுக்காகவே தவிர, யாருடைய காலடியிலும் விழுந்து கிடக்க அல்ல என்று குறிப்பிட்டார். வரும் காலங்களில் இந்தப் பேச்சால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றைச் சந்திக்கத் தான் தயார் என்றும், தனது நேர்மையான பாதை என்றும் மாறாது என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த 'நாய்' மற்றும் 'மயிர்' குறித்த அதிரடிப் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தவெக மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரும் மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!