லேடி கெட்டப்பில் யோகிபாபு... வைரலாகும் புகைப்படம்!
May 8, 2025, 11:00 IST
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் யோகி பாபு. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டியெங்கும் பரவியது. இவர் தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் யோகி பாபு லேடி கெட்டப்பில் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!