நாளை முதல் MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்… நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்கூட்டியே இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற கவலை தேவை இல்லை. வழக்கமாக மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்படும். அதேபோன்று தற்போதும் மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வின் வரிசை எண் மற்றும் நுழைவுச்சீட்டு அடிப்படையில் மதிப்பெண்கள் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!