undefined

 பெரும் சோகம்... மீனை உயிரோடு வாயில் போட்டு இளைஞர் துடிதுடித்து பலி!  

 

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வருபவர்  மணிகண்டன். 29 வயதான இவர்  கடந்த செவ்வாய்க்கிழமை மதுராந்தகம் அருகே கீழவளம் ஏரியில் மீன் பிடிக்கும் போது உயிருடன் உள்ள ஒரு மீனை வாயில் வைத்ததால்  மூச்சுத்திணறி உயிரிழந்தார். அரையப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும்  இவர், தினமும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. வெறும் கைகளால் மீன் பிடிக்கும் பழக்கத்தால் பிரபலமாக இருந்த மணிகண்டன், நீர்மட்டம் குறைந்திருந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.

இந்நிலையில் மீன்  பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் ஒரு மீனை பிடித்து அதனை உயிரோடு தன் வாயில் வைத்துள்ளார்.  அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்படி அந்த மீன் கூர்மையான இறக்கைகளுடன் இருந்த நிலையில் வாயில் வைத்து அவரால் அதனை திரும்ப வெளியே எடுக்க முடியவில்லை. அவரின் அருகே இருந்தவர்களும் அந்த மீனை எடுக்க முயற்சி செய்த நிலையில் அவர்களால் முடியவில்லை.

உடனடியாக அவரை அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். அவர் வாயில் வைத்தது பனங்கொட்டை மீன் எனக் அழைக்கப்படுகிறது. இந்த இனத்தைச் சேர்ந்தது தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிக வகையில் காணப்படும் நன்னீர் வகை மீனாகும்.  இந்த மீன் நீர்  இல்லாமல் ஈரப்பதத்தில் வாழக்கூடிய தன்மை கொண்டது எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?