சிங்கத்தின் வாயில் தலையை விட்ட இளைஞர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையவைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் ஆக்ரோஷமான பப்பர்டு சிங்கத்துடன் மிகவும் ஆபத்தான முறையில் விளையாடுகிறார். சிங்கத்தின் வாயைத் திறந்து அதன் பற்களையும் உட்பகுதியையும் பார்ப்பது போல் செயலில் ஈடுபடுகிறார்.
ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக சிங்கம் தனது தாடையை மூட முயன்றது. அந்த நொடியில் அங்கிருந்தவர்களும், வீடியோ பார்த்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார்.
ஒரு சிறு தவறு கூட உயிரைப் பறித்திருக்கும். காட்டு விலங்குகள் எப்போது எப்படி நடந்து கொள்வது என்று யாராலும் கணிக்க முடியாது. வனவிலங்குகளுடன் சாகசம் செய்யக் கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!