undefined

குளிர்பானம் குடித்த இளைஞர் மர்ம மரணம்... ! 

 

வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கிளின்டன் வயது 25.
வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார்.
சில காலமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அவர் பெரம்பூர் ரமணா நகரில் உள்ள நண்பர் பிரசாந்த் வீட்டிற்கு சென்றார்.
அங்கு நண்பர் குளிர்பானம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதை குடித்த சில நிமிடங்களில் கிளின்டன் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காலாவதியான பானமா அல்லது வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.
மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!