undefined

 ஸ்கூட்டரில் டேங்கர் லாரி மோதி  இளம்பெண் பலி! 

 
 

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி, தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு, ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மாதவரம் மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவை கடந்தபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில், லாரியின் டயர் ஏறியதில் சிவரஞ்சனியின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தியபின் நிற்காமல் தப்பிச் சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரை பிடிக்க, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!