பாலியல் வன்கொடுமை முயற்சி... தற்காப்புக்காக கோடரியால் வெட்டிய இளம்பெண்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை 18 வயது இளம்பெண் ஒருவர் கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டா மாவட்டம் முர்வால் கிராமத்தில் நேற்று பிற்பகல் இந்த அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது. சுக்ராஜ் பிரஜாபதி (50) என்ற நபர், அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த அந்த நபர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்கப் போராடிய அந்தப் பெண், தனது மானத்தைக் காத்துக்கொள்ளவும் தற்காப்புக்காகவும் வீட்டில் இருந்த 'பர்சா' என்ற கோடரி வகை ஆயுதத்தை எடுத்து அந்த நபரைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுக்ராஜ் பிரஜாபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த இளம்பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தற்காப்புக்காகவே தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் போலீசார் கைது செய்திருந்தாலும், அத்துமீறிய நபரைத் துணிச்சலாக எதிர்கொண்ட அந்தப் பெண்ணின் செயல் அந்தப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!