undefined

பகீர்... 22 வயசு தான்.. கிரிக்கெட் விளையாடிய போது இளைஞர் மயங்கி சரிந்து மரணம்...!

 

 கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திடீர் மாரடைப்புக்களும், அதனால் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது.  இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு நடத்தி வருகிறது. அந்த ஆய்வுகளின் படி  கொரோனாவால்  கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு   மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஓரிரு ஆண்டுகள் கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.  


மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் திடீரென மாரடைப்பால்   உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  அவரது பெயர்  இந்தல் சிங் ஜாதவ் பன்ஜாரா .   கார்கோன் மாவட்டத்தின் பல்வாடா என்ற இடத்தில்   இந்தல் சிங் பவுலிங் போட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து விளையாட்டு மைதானத்திலேயே மயங்கி சரிந்தார்.  உடனடியாக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் பஞ்சாரா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக விளக்கம் அளித்தனர்.  இது குறித்து மருத்துவர்கள்  "அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்  உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு   குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் கடுமையான   நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார்.   திடீரென அவருக்கு மயக்கம் ஏற்படவே, அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்"  அவரது  பேட்டிங்கில் இருந்த போதே நெஞ்சுவலித்தாகவும் அதனை அலட்சியப்படுத்தி தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார்.  பவுலிங் வீசும்  போது  நடுவில் தனியாக பிரிந்து மரத்திற்கு அடியில் அமர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில்   அவருக்கு மயக்கம் வரவே தன்னை அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி நண்பர்களுடன்   கூறியுள்ளார். மருத்துவமனைச் செல்லும் முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!