undefined

மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை... ஊதா நிற வழித்தடத்தில் ரயில்கள் நிறுத்தம்  ! 

 
 

பெங்களூரு ஊதா வழித்தட மெட்ரோவில் இன்று காலை சோகமான சம்பவம் ஒன்று நடந்தது. வழக்கம்போல் இயங்கிய ரெயில் கெங்கேரி மெட்ரோ நிலையத்தை வந்தடைந்த போது, திடீரென இளைஞர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்ததால், நிலையத்தில் எழுந்த பரபரப்பு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை தொடங்கினர். உயிரிழந்தவர் ஷந்தாகோட் பட்டீல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏன் இந்த கடுமையான முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திடீர் தற்கொலை காரணமாக ஊதா வழித்தடத்தில் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ரெயில் தாமதத்தால் பொதுமக்கள் அதிக சிரமம் அனுபவித்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு காலை 9.40 மணிக்கு மீண்டும் சேவையை வழக்கம்போல் தொடங்கியது. பின்னர், ஊதா வழித்தடத்தில் ரெயில்கள் சாதாரணமாக இயக்கப்பட்டன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!