தண்ணீர் குடித்த இளைஞர் மயங்கி சரிந்து திடீர் மரணம்... பெரும் பரபரப்பு! 

 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பட்டப்பகலில் நடந்த ஒரு சம்பவம் அந்தப் பகுதி மக்களையே உறைய வைத்துள்ளது. சாலையோரக் கடை ஒன்றில் தாகத்திற்காகத் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த 25 வயது இளைஞர், யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். துள்ளிக் குதித்துத் திரிந்த வாலிபன், ஒரு சொட்டுத் தண்ணீர் குடித்த வேகத்தில் பிணமாக மாறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். என்னதான் இருந்தாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் அந்த இளைஞரின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் விலகும் என்று சொல்லப்படுகிறது. தாகம் எடுக்கிறது என்று கடைக்குச் சென்ற இடத்தில், எமன் இப்படித் தண்ணீரின் வடிவில் காத்திருப்பான் என்று அந்த அப்பாவி இளைஞன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

தற்போது அந்த இளைஞரின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவது ஒருபுறம் கவலையை ஏற்படுத்தினாலும், இந்தச் சம்பவம் அஜ்மீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாகம் தீர்க்கப் போன இடத்தில் ஒரு உயிர் தாரைவார்க்கப்பட்டது, அங்கிருந்த கடைக்காரர்களையும் மற்ற பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!