10 நாட்களில் 2வது சம்பவம்... இருசக்கர வாகன இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
சென்னை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் அருகே நேற்று மாலை நடந்த கொடூர தாக்குதல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற அஸ்வத் என்ற 20 வயது இளைஞரை மர்ம கும்பல் வழிமறித்து கத்தியால் ஓட ஓட துரத்தி வெட்டியதில் அவர் தீவிர காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார். பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசன்புரத்தை சேர்ந்த அஸ்வத் மீது முன்பு அடிதடி உட்பட பல வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்திற்குப் பின்னர் பொதுமக்களின் தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார், ரத்தத்தில் மிதந்த அஸ்வத்தையை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற அவர் இன்று காலை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இதே மயிலாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மந்தைவெளியில் 21ம் தேதி மவுலி என்ற இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குள் இரு தாக்குதல்கள் அரங்கேறியதால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு குறித்து மக்களிடம் கடும் அச்சம் நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!