பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு... கதறும் மனைவி!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, இளைஞர் ஒருவரின் சடலம் சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள தொட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி பிரியா. இந்நிலையில், கோபிநாத் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பிரியா வீட்டில் இல்லாத நேரத்தில், கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பிரியாவுக்குத் தகவல் தெரிவித்த உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர், அவர் வருவதற்கு முன்பாகவே கோபிநாத்தின் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தகனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனக்குத் தகவல் தெரிவித்துவிட்டுத் தான் வருவதற்குள் உடலை அவசரமாக எரிப்பது ஏன் என்றும் பிரியா கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்த கோபிநாத்தின் சடலத்தை மீட்டனர். பின்னர் தீயை அணைத்து, எஞ்சியிருந்த உடல் பாகங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோபிநாத் உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியா வருவதற்குள் உடலை எரிக்க முயன்றவர்கள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டுப் பிரியா கதறி அழுத சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கோபிநாத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!