உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி... சொமேட்டோ பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இன்று (மார்ச் 20, 2026) சோமாட்டோ நிறுவனம் ஒரு கசப்பான செய்தியை வழங்கியுள்ளது. இதுவரை ஒரு ஆர்டருக்கு ரூ.12.50 ஆக இருந்த 'பிளாட்பார்ம் கட்டணம்' (Platform Fee), தற்போது 19% உயர்த்தப்பட்டு ரூ.14.90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்தாலும், அதற்கான டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி தவிர்த்து, இந்தக் கூடுதல் தொகையைச் சோமாட்டோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டியிருக்கும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை ஏற்றம் காரணமாக டெலிவரி செலவுகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போட்டி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) தனது தளக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது சோமாட்டோவும் அதற்கு இணையான விலையை நிர்ணயித்துள்ளது. கடந்த 2023-ல் வெறும் 2 ரூபாயில் தொடங்கப்பட்ட இந்தக் கட்டணம், கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து இன்று 15 ரூபாயைத் தொடும் நிலைக்கு வந்துள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக, ஒவ்வொரு முறை ஆர்டர் செய்யும்போதும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.2.40 செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ஆர்டர்கள் வரும் வேளையில், இந்தச் சிறிய உயர்வு சோமாட்டோ நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் லாபத்தைத் தரும் எனக் கருதப்படுகிறது. "விலைவாசி உயர்வால் ஏற்கனவே தவித்து வரும் வேளையில், இதுபோன்ற மறைமுகக் கட்டணங்கள் நடுத்தர மக்களின் பட்ஜெட்டைப் பதம் பார்க்கிறது" என உணவுப் பிரியர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!