அதிர்ச்சி வீடியோ... பார்க்கிங் பிரச்சனை... விஞ்ஞானியை அடித்தே கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்!
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருபவர் மருத்துவர் அபிஷேக். இவருடன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இந்தியா திரும்பி மொகாலியில் பணியில் சேர்ந்து இருந்தார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் அபிஷேக்கிற்கு, அவரது சகோதரி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருந்தார்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அபிஷேக் மொகாலியில் செக்டர் 67ல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் தனது வீட்டிற்கு வெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அவரது இரு சக்கர வாகனம் அருகில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மொகந்தி உட்பட சிலர் இரு சக்கர வாகனத்தை சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றவர்களுக்கும் அபிஷேக்கிற்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அபிஷேக்கை அங்கு நின்று கொண்டிருந்த மொகந்தி என்பவர் கீழே பிடித்து தள்ளிவிட்டார். அத்துடன் விடாமல் தரையில் விழுந்து கிடந்த அபிஷேக்கை மொகந்தி தொடர்ந்து அடித்து உதைத்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!