இதுவரை வாங்காதவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு.. மிஸ் பண்ணாதீங்க!
பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்த ரூ.3000 ரொக்கப்பணம் மற்றும் பரிசுத் தொகுப்பை இன்னும் பல குடும்பங்கள் வாங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை 90 சதவீத மக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வேலை நிமித்தமாகவோ அல்லது பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் சென்றதாலோ மீதமுள்ள 10 சதவீத அட்டைதாரர்கள் இன்னும் பரிசுத் தொகுப்பைப் பெறவில்லை.
பொங்கல் விடுமுறை முடிந்து ரேஷன் கடைகள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் திங்கட்கிழமை முதல், விடுபட்டவர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஏற்கனவே அறிவித்தபடி ரூ. 3,000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!