undefined

கதறித் துடித்த பெற்றோர்... மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
 

 

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  வெங்கநாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் 20 வயது தியாக மூர்த்தி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் 2 ம் ஆண்டு பி.எஸ்.சி. ஐ.டி. படித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று காரமடை தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லுாரிக்கு விடுமுறை என்பதால், தனது நண்பரான பரிசாபாளையத்தில் வசித்து வரும்  லோகித்தை பார்க்க  தியாக மூர்த்தி வந்துள்ளார். இருவரும் பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே, பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் இருவரும் சென்ற நிலையில், தியாக மூர்த்தியின் கையில் மின் கம்பி பட்டதில் தூக்கி வீசப்பட்டார். 

உடனடியாக லோகித் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தியாக மூர்த்தியை புன்செய் புளியம்பட்டி  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தியாகமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?