கோர விமான விபத்து... 133 பேர் உடல் கருகிய நிலையில் மீட்பு... அமித்ஷா வருத்தம்!
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக பணிகளை மேற்கொன்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து, தற்போது வரை கிடைத்த தகவலின்படி 133 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் உடல்கள் மீட்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை. விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!