செல்போன் லாக் செய்ததால் ஆத்திரம்.. காதலியை கொன்று பள்ளத்தில் வீசிய கள்ளக்காதலன்!
ஏற்காடு மாரமங்கலம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சண்முகத்தின் மனைவி சுமதி (24). இவர் கடந்த 23-ம் தேதி மயமாகி இருந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவருடன் சுமதிக்குத் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.
சுமதிக்கும் வெங்கடேஷுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் லாரி ஓட்ட வெளியில் செல்லும் நேரங்களில் இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக சுமதி தனது செல்போனை 'லாக்' செய்து வைத்துள்ளார். மேலும் வெங்கடேஷின் அழைப்புகளையும் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் சுமதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ என வெங்கடேஷ் சந்தேகப்பட்டுள்ளான்.
கடந்த 23-ம் தேதி சுமதியைத் தனது காபி தோட்டத்திற்கு வரவழைத்த வெங்கடேஷ், அங்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் செல்போன் லாக் குறித்துக் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுமதியின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு சுமதியின் தாலியைக் கழற்றிக்கொண்ட வெங்கடேஷ், சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி தனது பைக்கில் 6 கி.மீ தூரம் கொண்டு சென்றுள்ளார். குப்பனூர் சாலையில் உள்ள 300 அடி பள்ளத்தில் யாரும் கண்டுபிடிக்காத வகையில் வீசி எறிந்துள்ளார்.
சுமதி வேறு யாருடனோ ஓடிவிட்டார் என நம்ப வைக்க வெங்கடேஷ் ஒரு நாடகமாடினார். சுமதியின் தாலியை ஒரு பார்சலில் வைத்து பஸ் டிரைவர் மூலம் சுமதியின் கணவர் சண்முகத்திடமே கொடுத்தனுப்பியுள்ளார். ஆனால், அந்தத் தாலி வெங்கடேஷிடம் எப்படி வந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சண்முகம் அளித்த புகாரே, வெங்கடேஷைச் சிக்க வைத்தது.
போலீசார் வெங்கடேஷைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் 300 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் இருந்த சுமதியின் சடலத்தை போலீசார் மீட்டனர். தற்போது வெங்கடேஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!