undefined

புதுக்கோட்டை வரும் அமித்ஷாவின் மெகா 'தேர்தல் ஸ்கெட்ச்'.. ஒரே மேடையில் எடப்பாடியுடன் பிரசாரம்!  

 

தமிழக அரசியலில் 2026 தேர்தல் அனல் தகிக்கும் வேளையில், டெல்லியில் இருந்து அதிரடி வியூகங்களுடன் தமிழகம் வருகிறார் 'சாணக்கியர்' அமித்ஷா. வரும் பிப்ரவரி 4-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்க பாஜக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் முதல் மேற்கொண்டு வந்த 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தேர்தல் பிரசார யாத்திரை, புதுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்று, தேர்தல் பணிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்காகப் புதுக்கோட்டை நத்தம் பண்ணை பகுதியில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த மேடை வெறும் பாஜக மேடையாக மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத் தொடக்க விழாவாகவும் அமையவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இன்னும் இணையாமல் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் மற்றும் தேமுதிக ஆகியோரை அமித்ஷா சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து திமுகவை வீழ்த்துவதே அமித்ஷாவின் முக்கிய இலக்கு.

புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருச்சி செல்லும் அமித்ஷா, 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைத் தரிசனம் செய்கிறார். பின்னர் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் 'நம்ம ஊர் மோடி ஜி' பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதில் 1000 பெண்கள் பங்கேற்று பொங்கலிட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னின்று கவனித்து வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!