undefined

மருத்துவமனைக்குள் 'ஸ்கெட்ச்'... ரவுடி கொலை வழக்கில் 4 போலீசார் சஸ்பெண்ட்!

 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று அதிகாலை அரங்கேறிய ரத்தச் சரித்திரம், தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி ஆதிகேசவன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த 4 போலீசார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொளத்தூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிகேசவன் (23), தனது தோழி சுசித்ராவுக்குப் பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்ததால், அவருக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் மற்றொரு தோழியான சாருமதியுடன் பார்வையாளர்கள் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவமனைக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த ஆதிகேசவனைச் சூழ்ந்த அந்தக் கும்பல், அவரது தலையிலேயே குறி வைத்துச் சரமாரியாக வெட்டியது. இதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ஆதிகேசவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மிகவும் பாதுகாப்பான அரசு மருத்துவமனையில் இத்தகைய கொலை நடந்ததை அடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்: சம்பவத்தின் போது மருத்துவமனை அவுட்போஸ்டில் பணியில் இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 பேர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் உதவி ஆணையர் துரை ஆகியோருக்குப் பாதுகாப்புத் தவறு குறித்து விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!