undefined

இன்று மதுரையில் பாஜக தலைவர்களுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

 

இன்று பகல் 11 மணியளவில் ஓட்டலில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். பிற்பகல் தமிழக பாஜக தலைவர்களுடன்  அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் மாலை பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுகிறார். 

கடந்த முறை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வந்தபோது அதிமுக-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இருகட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். தங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகளை கொண்டுவரவும், திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியை களம் இறக்கவும் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், மதுரையில் பாஜக நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்கும் வகையில் இன்று மாலை கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் சுமார் 15,000 பேர் வரை பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பேச இருக்கிறார். சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த கூட்டத்தை முடித்து விட்டு, மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்லும் அமித்ஷா அங்கிருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு டெல்லி செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது