undefined

 அதிர்ச்சி... வாக்களிக்க வந்தவர்களில் 2 பேர் வாக்குச்சாவடியில் உயிரிழந்த சோகம்!

 

 சேலம் மாவட்டத்தில் இன்று காலை வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வந்திருந்தவர்களில் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் 2 பேர் மயங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூரமங்கலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மனைவியுடன் வாக்களிக்க வந்த பழனிச்சாமி என்பவர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது  தெரியவந்தது. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அதே போல் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!