பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... பாஜக பிரமுகரே தாக்கியது அம்பலம்!
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகர் கிருஷ்ணகுமார், "கேரளா, கொல்லம், குந்த்ராவில் எனது லோக்சபா பிரச்சாரத்தின் போது எதிர்கட்சிகளின் தாக்குதலின் போது எனது கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனையும், ஆதரவும் தான் எனக்கு முக்கியம்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் கொல்லம் தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார், கிருஷ்ணகுமரைத் தாக்கியது உள்ளூர் பாஜக தலைவர் புத்தன்விளா என்று கண்டறிந்தனர். புத்தன்விளா தனது ஸ்கூட்டர் சாவியால் கிருஷ்ணகுமாரை தாக்கியதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து நேற்று புத்தன்விளா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.புத்தன்விளா மீது ஐபிசி பிரிவு 324ன் (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!