சுற்றுலாப் பயணிகள் இன்ப அதிர்ச்சி... வெறும் ரூ.37,000க்கு அமெரிக்கா செல்ல விமானக்கட்டணம்!
இந்தியா முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில்ல் விமான டிக்கெட்கள் விலை குறைந்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் செல்வதற்கான ஒருவழிப்பயண டிக்கெட்டின் விலை ரூ.37,000 மட்டுமே. மே மாதத்தின் நடுப்பகுதியில் பயணிப்பதற்கு இப்போது இந்த மலிவு விலை டிக்கெட்டில் புக் செய்யலாம்.
திரும்பும் டிக்கெட்டுகளில் மலிவானது ரூ.76,000 க்குக் கிடைக்கிறது. இருந்தாலும், இது மத்திய கிழக்கு விமான நிலையத்தில் நீண்ட நேர நிறுத்தத்தையும் உள்ளடக்கியது. டெல்லி அல்லது லண்டன் வழியாகச் செல்லும் விமானத்தில் ரூ.85,000க்கு டிக்கெட் கிடைக்கும்,. இதில், நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்காது.
இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய புலம்பெயர்ந்த சமூகமாக இருந்து வருகின்றனர்.விடுமுறைக்கு அமெரிக்காவில் பணிபுரியும் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்பவர்கள், அமெரிக்காவில் இருந்து குடும்பத்திரைப் பார்க்க இந்தியாவுக்கு வருபவர்கள் அதிகமாக இருப்பதாக எப்போதும் விமானப் பயணத்திற்குத் தேவை உள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள்தான் அதிகம். இதனால் அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து ஆண்டு முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!