டொனால்ட் டிரம்ப் மாமியார் காலமானார்... ‘இரும்பு பெண்மணி’ என மெலனியா உருக்கம்!

 

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மாமியாரும், மெலனியா டிரம்பின் தாயாருமான அமெலியா நாவ்ஸ் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமெரிக்க அதிபரின் மாமியாரும் மெலனியா டிரம்பின் தயாருமான அமெலியா நாவ்ஸ் செவ்வாய்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 78. உடல் நலக்குறைவு காரணமாக மியாமியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள மெலனியா, ‘கடும் துயருடன் இந்த தகவலை பகிர்கிறேன். எனது பிரியத்திற்குறிய தயார் அமெலியா காலமானார்.

நாவ்ஸ் ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்தார். தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது கணவர் விக்டருடன் அமெரிக்காவில் குடியேறினார். அதன்பின்பு, இருவரும் 2018-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

1945, ஜூலை மாதம் 9-ம் தேதி ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர். 2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா மாநில பாம் பீச் பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது மாமியாரின் இறப்பு குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில். ‘அமெலியா நாவ்ஸ் வானத்தில் உள்ள அழகான இடத்திற்குச் சென்றுவிட்டர். அவரது இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!