மெக்சிகோவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 2 பேர் பலி!
Updated: Jan 3, 2026, 10:30 IST
தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் அகபுல்கோவிலிருந்து வடகிழக்கே 57 மைல்கள் தொலைவில் ஏற்பட்டது.
35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடங்கள் பலமாக குலுங்கின. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!