வருட துவக்கத்திலேயே அதிர்ச்சி... ஜப்பானில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை!
வருடத்தின் துவக்கத்திலேயே பெரும் அதிர்ச்சியை ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என ஜப்பான் ஒளிபரப்பு கழகம் வெளியிட்டுள்ள தகவலை ஜப்பான் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.
புத்தாண்டின் துவக்கத்திலேயே மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பயங்கர நிலநடுக்கம் டோக்கியோ மற்றும் கான்டோ பகுதிகளில் முழுவதும் உணரப்பட்டது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!