மூன்றே மாசத்துல ரூ.4,672 கோடிகள் பரிவர்த்தனை... மும்பையை அதிர வைத்த ஜதின் மேத்தா!

 
மேத்தா

சட்ட விரோத பங்கு வர்த்தகத்தில், மூன்று மாதங்களில் ரூ.4,672 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்த, மும்பையைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். பங்குச் சந்தை பரிவர்த்தனை செய்யும் போது, அதற்காக சில கட்டணங்கள், வரிகள் செலுத்த வேண்டும். இதை தவிர்க்கும் வகையில், 'டப்பா டிரேடிங்' எனப்படும் சட்டவிரோத பங்கு வர்த்தகத்தில் சிலர் ஈடுபடுகின்றனர்.

பங்குச்சந்தையின் விலையின் அடிப்படையில், பங்கு சந்தைக்கு வெளியே தனியாக, இந்த பரிவர்த்தனை நடக்கும். இதில் பண பரிவர்த்தனையோ, பங்குகள் வாங்குவது,  விற்பது என எதுவும் நடக்காது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு தோற்றம் மட்டும் ஏற்படுத்துவார்கள்.

கழுகு க்ரைம்

ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை உயருமா அல்லது குறையுமா என்பது குறித்து நடக்கும் சூதாட்டம் தான் டப்பா டிரேடிங். ஆனால், இதில் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம் ரொக்கமாக வழங்கப்படுவதால் பலரும் இதில் சட்ட விரோதமாக ஈடுபட ஆர்வம் காண்பிக்கின்றனர்.

மேத்தா

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் காண்டிவல்லியை சேர்ந்த ஜதின் சுரேஷ்பாய் மேத்தா என்பவர், இந்த டப்பா டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவருடைய வீட்டில், போலீசாரும், பங்குச் சந்தை அதிகாரிகளும் திடீரென ஆய்வு செய்தனர். கடந்த, மூன்று மாதங்களில், இவர், 4,672 கோடி ரூபாய் அளவுக்கு இந்த சட்டவிரோத டப்பா டிரேடிங்கில் ஈடுபட்டு பங்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இதனால், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரிகள் என ரூபாய் 1.95 கோடி மோசடி செய்துள்ளார். இவரைக் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!

From around the web