ரசிகர்கள் அதிர்ச்சி... பிக் பாஸ் நடிகை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!

 
நிவேதிதா

திரையுலகில் விவாகரத்து செய்திகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. இந்த ஜோடி எல்லாம் காதலித்து வந்த போதே, ஆதர்ஷ தம்பதியர் என்று ரசிகர்கள் மனம் மகிழ்ந்தனர். இத்தனைக்கும் விவாகரத்துக்காக கோர்ட் படியேறிய போதும், நிவேதிதாவின் கரம் பிடித்து பத்திரமாக படிகளில் அழைத்துச் செல்கிறார் சந்தன். ஆனாலும், இது ஏதோவொரு ஃபேஷன் போல விவாகரத்துக்கு பிரபலங்கள் வரிசைக்கட்டி நிற்கிறார்கள். பிக் பாஸ் பிரபலம் சந்தன் ஷெட்டியும் நடிகை நிவேதிதாவும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதிக்கு பெங்களூரு மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. இதன் மூலம் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதாவின் நான்கு வருட திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.

பெங்களூரு சாந்திநகரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் பாடகர் சந்தன் ஷெட்டியும் நடிகை நிவேதிதா கவுடாவும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்குச் சென்றனர். 2வது கூடுதல் நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கியது.

நிவேதிதா

பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக இருந்த இவர்கள் பின்னர் காதலித்து பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் செய்த பல ரீல்கள் அவர்கள் இருவரும் நெருக்கமான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாக அமைந்தன. தற்போது விவாகரத்து மூலம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். விவாகரத்துக்கான காரணம் தெரியவில்லை. விவாகரத்துக்குப் பிறகும் இருவரும் கைகோர்த்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

5வது திருமணம்

நடிகரும், கன்னட பிக் பாஸ் வெற்றியாளருமான சந்தன் ஷெட்டி மற்றும் அவரது மனைவி நிவேதிதா கவுடா ஆகியோர் பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் நிவேதிதா அறிவித்துள்ளார். அந்த குறிப்பில், இந்த நாளில், நாங்களும், சந்தன் ஷெட்டியும், பரஸ்பர புரிதலின் அடிப்படையில் எங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக முடித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web