நெட்பிளிக்ஸில் வெளியானது ‘GOAT'.. வெங்கட்பிரபு கொடுத்த புது விளக்கம்!

 
செம மாஸ்... விஜய் 'GOAT' படத்தில் தல அஜித்.. சஸ்பென்ஸ் உடைத்த இயக்குநர் வெங்கட்பிரபு!

‘GOAT' படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், திரையரங்குகளில் வெளியான வெர்ஷனே ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். இது குறித்து படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய், சிநேகா, லைலா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் ’GOAT' திரைப்படம் வெளியானது. அப்பா- மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். குறிப்பாக மகன் கதாபாத்திரத்தில் விஜய் வெளிப்படுத்தியிருந்த வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவித்தது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், இன்றும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ’GOAT' வெளியாகியுள்ளது. படத்தின் ’Director Cut' என அழைக்கப்படும் முழு வெர்ஷனை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், தியேட்டர் வெர்ஷனே ஓடிடியிலும் வெளியாகி இருப்பது பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய்

அதில், ‘’GOAT' படத்தின் டைரக்டர் கட் வெர்ஷனுக்கான விஎஃப்எக்ஸ் மற்றும் இறுதிப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. படத்தின் தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி அந்தக் காட்சிகளை டெலிட்டட் காட்சிகள் அல்லது எக்ஸ்டண்டட் வெர்ஷனாகவோ வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!