அதிர்ச்சி... நடுரோட்டில் வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ்... சம்பவ இடத்திலேயே பலியான நோயாளி!

 
ஆம்புலன்ஸ்

நடுரோட்டில் நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில்  நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை- புனே விரைவு பாதையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி ஆம்புலன்ஸ் ஒன்று 74 வயது மூதாட்டி நிலாபாய் மற்றும் உறவினர்களை ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக கர்நாடகாவில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸின் முன் பகுதியில் புகை வருவதை கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்தார்.

இதேபோல் நோயாளியின் உறவினர்கள் ஆறு பேரும் உடனடியாக ஆம்புலன்ஸிலிருந்து இறங்கினர். அப்போது திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி நிலபாய் கபால்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அதிலிருந்த சிலிண்டர் வெடித்து, இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் உருக்குலைந்து கிடைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web