கொடூரம்... தலைக்கேறிய போதையில் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற தந்தை!

 
போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, தலைக்கேறிய குடிபோதையில், தனது 2 வயது குழந்தையைத் தரையில் அடித்துக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூரைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சைஸ்தா எனும் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி, கணவரைப் பிரிந்த சைஸ்தா, 2 பெண் குழந்தைகளின் தாயாவார். விவாகரத்தான நிலையில், தனது இரு குழந்தைகளுடன் அஷ்ரஃப் மற்றும் சைஸ்தா வசித்து வந்தனர்.

டாஸ்மாக்

குடிபோதைக்கு அடிமையான அஷ்ரஃப் அடிக்கடி சைஸ்தாவையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று நள்ளிரவு தம்பதியரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஷ்ரஃப், மனைவி மற்றும் 2 மகள்களையும் கொடூரமாக தாக்கினார். 2 வயது குழந்தையை ஓங்கி தரையில் பலமுறை அடித்தார். இதே போல 3 வயது பெண் குழந்தை மற்றும் அவரது மனைவி சைஸ்தா ஆகியோரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, சைஸ்தா மற்றும் அவரது 2 மகள்களும் மயங்கிக் கிடந்தனர். அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

க்ரைம்

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 2 வயது குழந்தை உயிரிழந்தது. மேலும் 3 வயது குழந்தை மாவட்ட மருத்துவமனையில் தனது தாயுடன் உயிருக்குப் போராடி வருகிறது. இறந்த குழந்தையின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் மகளை அடித்துக் கொலை செய்த அஷ்ரஃபை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web