கடன் வாங்க போன இடத்தில் காதல்... காதலனை கரம்பிடித்த இளம்பெண்... காவல் நிலையத்தில் தஞ்சம்!

 
அனுஷ்வர்யா

தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் வசித்து வருபவர் அனுஷ்வர்யா (24). இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ்குமார் (33) என்பவரை காதலித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அனுஷ்வர்யா கடனுக்காக இந்த நிதி நிறுவனத்திற்கு சென்றார்.

பள்ளி காதல்

அப்போது மகேஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர், இந்த விஷயம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்ததும், பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரது வீட்டாரையும் போலீசார் அங்கு வரவழைத்தனர். அப்போது அவர்களை ​​அழைத்துச் செல்வதாக வாலிபரின் பெற்றோர் தெரிவித்தனர். அதன் பிறகு பெண்ணின் பெற்றோர்கள் எங்களுக்கும் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். பின்னர் காதல் ஜோடியை இளைஞரின் வீட்டார் அழைத்து சென்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web