அமேதி 4 பேர் படுகொலை... குற்றவாளி மீது போலீசார் என்கவுண்டர்!

 
அமேதி பூனம்

அமேதியில் நேற்று முன் தினம் ஆசிரியர் மற்றும் அவரது மனைவி பூனம், இரண்டு மகள்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சந்தன் வர்மா மீது காவல்துறையினர் என்கவுன்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சந்தன், கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், சுட்டுக் கொலைச் செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எடுத்துத் தருவதாக கூறிய நிலையில், காவல்துறையினர் சந்தனை அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து, தப்பிச் செல்ல முயன்றதால் பாதுகாப்பு மற்றும் தற்காத்துக் கொள்வதற்காக சந்தன் சுட்டுப் பிடிக்கப்பட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூனம்

கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவி, கடந்த மாதம் காவல் நிலையத்தில் சந்தன் மீது பாலியல் வன்கொடுமை புகார் மற்றும் கொலை மிரட்டல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீடு புகுந்து ஆசிரியர், அவரது மனைவி, இரு மகள்கள் என 4 பேரையும் சந்தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். சுட்டுக் கொலைச் செய்யப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆசிரியரை மூன்று முறையும், அவரது மனைவி பூனத்தை இரண்டு முறையும் 5 வயது மகள் மற்றும் 2 வயது மகள் ஆகியோரை தலா ஒரு முறையும் துப்பாக்கியால் சுட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பும், சந்தன் தனக்கு பாலியல் துன்புறுத்தி கொடுத்து, மிரட்டியிருப்பதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருப்பதாகவும் உடனடியாக சந்தன் மீது நடவடிக்கை எடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு சந்தன் தான் பொறுப்பு என்றும் பூனம்  தனது புகார் மனுவில் வலியுறுத்தியிருக்கிறார்.

பூனம்

சந்தனைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்துகையில், குற்றவாளி கொலையை ஒப்புக் கொண்டதாகவும், பூனத்துக்கும் சந்தனுக்கும் இடையே கடந்த இரு வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, அவள் தொடர்பை துண்டித்து விட்டதால் ஆத்திரத்தில் கொலைச் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், சுட பயன்படுத்திய துப்பாக்கியை எடுத்து தருவதாக கூறி, போலீசாரை சுட முயன்றதால் பதிலுக்கு தற்காப்புக்காக போலீசார் சுட்டதாக கூறப்படுகிறது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!