கொடூரத்தின் உச்சம்... 4 வயது சிறுமி துடிதுடிக்க பாலியல் வன்கொடுமை...!

 
கொல்கத்தா கொல்கத்தா
 
 

கொல்கத்தா அருகே ஹூக்ளி மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தாரகேஸ்வர் ரயில்வே கொட்டகையில் தனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி, கொசுவலையை வெட்டி அழைத்துச் செல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மறுநாள் பிற்பகல், தாரகேஸ்வர் ரயில்வே உயர் வடிகால் அருகே குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்ததை போலீசார் மீட்டனர்.

பாலியல்

குழந்தை பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. “அவள் என்னுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். யாரோ அவளை அழைத்துச் சென்றார்கள். கொசுவலையை வெட்டி அழைத்துச் சென்றனர். அவள் நிர்வாணமாக இருந்தாள்,” என சிறுமியின் பாட்டி தெரிவித்தார். வீடு இடிக்கப்பட்டதால் அவர்கள் தெருவில் தங்கி வந்ததாகவும், வசிக்க இடமில்லையெனவும் அவர் உருக்கமாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஞாயிற்றுக்கிழமை காலை ஒருவரை கைது செய்தனர். சிறுமி தற்போது தாரகேஸ்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், எஃப்ஐஆர் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதாக பாஜக குற்றம் சாட்டி, மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!