நெகிழ்ச்சி... ஐபிஎஸ் அதிகாரியான 9 வயது சிறுவன்!
வாரணாசியை சேர்ந்த 9 வயது சிறுவன் ரன்வீர் பார்தி. மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனுக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இதை நிறைவேற்ற வாரணாசி போலீசார் சிறுவனை ஒரு நாள் ஐபிஎஸ் அதிகாரியாக்கி ஐபிஎஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர்.
09 वर्षीय बालक रणवीर भारती के ब्रेन ट्यूमर का इलाज महामना कैंसर अस्पताल वाराणसी में चल रहा है, ऐसी अवस्था में रणवीर ने #IPS अधिकारी बनने की इच्छा व्यक्त की, तो #adgzonevaranasi @piyushmordia के कार्यालय में बच्चे की इच्छा की पूर्ति की गयी । pic.twitter.com/xxeGFT3UKe
— ADG ZONE VARANASI (@adgzonevaranasi) June 26, 2024
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாரணாசி போலீசார் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மற்ற அதிகாரிகள் காக்கி உடையில் இருந்த சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில், மற்ற அதிகாரிகள் சிறுவனுக்கு வணக்கம் செலுத்தி கைகுலுக்கி உள்ளனர்.

சிறுவன் பதிலுக்கு வணக்கம் செலுத்துகிறான். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு 4657 பார்வைகளையும் 142 லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
