பகீர்... சக பணியாளரின் 14 வயது மகள் பாலியல் பலாத்காரம்.. மேலதிகாரி வன்மம்!

 
ஜீது ராணா

தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண்ணின் 14 வயது மகளிடம் அன்பாகப் பழகுவது போல நடித்து, பாலியல் பலாத்காரம் செய்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள பதேனா பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அந்த பெண் அங்குள்ள துணி உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த மகளை அவ்வப்போது கம்பெனிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, சிறுமியுடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ஜீது ராணாவுக்கு (வயது 21) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ஒருகட்டத்தில், சிறுமியை காதலித்த வாலிபர்,  திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். பின்னர் நிறுவனத்தில் உள்ள குடோனில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 45 வயதான பாபு சவுத்ரி என்பவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து சிறுமியை மிரட்ட சவுத்ரி ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியின் மீது மோகம் கொண்ட சவுத்ரி , அந்த வீடியோவை சிறுமியின் உறவினர் ஒருவரிடம் காட்டியுள்ளார்.

குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சிறுமியின் தாயாருக்கு தகவல் தெரிவித்தார். மகளிடம் உண்மையைக் கேட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பின், சிறுமியை சீரழித்த ஜீத்துவையும், அதை வீடியோவாக பதிவு செய்த சவுத்ரியையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web