6 வயது சிறுமி கடத்தி கொலை செய்து கால்வாயில் வீச்சு... கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்!

 
அஸ்வியா அஸ்வியா

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் உபயதுல்லா கிராமத்தில் வசித்து வருபவர்  அசன்துல்லா. இவரது மனைவி சானியா. இவர்களது மகள் 6 வயது அஸ்வியா. அக்டோபர் 1ம் தேதி அஸ்வியா வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்தார். இவரை சிறிது நேரத்தில் காணாததால் பெற்றோர்கள் பதறித் துடித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.  

அஸ்வியா

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 2 நாட்களுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள கால்வாய் தண்ணீரில் அஸ்வியா சடலமாக மிதந்தாள் இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   அஸ்வியா கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

உத்தரபிரதேச போலீஸ்
அஸ்வியாவின் தந்தை அசன்துல்லாவிடம் அதே பகுதியில் வசித்து வரும்  ஒரு பெண், கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப தருமாறு அசன்துல்லா தொடர்ந்து கேட்டு நச்சரித்து கொண்டே இருந்தார்.  இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், உறவினர்களுடன் சேர்ந்து வீட்டின் வெளியே விளையாடிய அஸ்வியாவை கடத்திச்சென்று கொலை செய்து கால்வாயில் வீசியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில்   2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!