தந்தையின் மரணத்தால் 10 வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் சிறுவன்... உதவிக்கரம் நீட்டிய ஆனந்த் மகேந்திரா!

 
ஜஸ்பிரீத்

தனது தந்தை திடீரென மரணித்த நிலையில், டெல்லி திலக் நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத், 10 வயதில் தன்னுடைய குடும்ப பாரத்தை சுமக்க தனி ஆளாக உணவகத்தை நடத்துவது குறித்து தகவலறிந்த ஆனந்த் மஹேந்திரா சிறுவனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

சிறுவனின் தந்தை மூளை கட்டியால் சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் தனது தந்தையின் தொழிலாளான, தெருவோரம் முட்டை மற்றும் சப்பாத்தி போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் சிற்றுண்டி கடையை வைத்து நடத்தி வருகிறார். சிறுவனுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவரை பராமரிக்க வேண்டிய கடமை உள்ளது. இதனால் சிறுவன் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலானது.


 

 

இந்நிலையில், விடியோவை கண்ட ஆனந்த் மகேந்திரா, தனது பவுண்டேசன் உதவியுடன் சிறுவனின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!