நள்ளிரவில் கோர விபத்து... 20 அடி உயர பாலத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த பேருந்து... 4 பேர் பலி!

 
தண்டவாளத்தில் பேருந்து

நள்ளிரவில், 20 அடி உயரத்தில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று, ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் ராஜஸ்தானில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்தனர். அந்த வழிதடத்தில் ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஹரித்வாரில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தவுசா ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு பேருந்து வந்த போது, திருப்பத்தில் திரும்பிய பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து, சாலையில் இருந்த ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, சுமார் 20 அடி பள்ளத்தில் இருந்த ரயில்வே பாதையில் பேருந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரயில்வே பாதையில் விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட அதிகாரிகள், போலீஸார், ரயில்வே பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் படுகாயமடைந்த 34 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகாயமடைந்த 34 பேருக்கு சிகிச்சை

பேருந்து ரயில்வே பாதையில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கிரேன் மூலம் பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில் சேவை சீரானது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web