மொத்தமும் போச்சு... தீப்பற்றி எரிந்த காவல் நிலையம்... முக்கிய ஆவணங்கள் சாம்பலான சோகம்!

 
காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையம் காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையம்

டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு 12:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து உடனடியாக டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. ஆனால் அதற்குள் தீ காவல் நிலையம் முழுவதும் பரவியது.


இதில், காவல் நிலையத்தில் இருந்த ரேக்குகள், கோப்புகள், பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையத்தில் மெட்ரோ துணை ஆணையர் அலுவலகமும் உள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். டெல்லியில் காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!